Posts

கடவுள்கள் பித்தலாட்டம்

விஷ்ணு அவதாரம் விஷ்ணு அவதாரக் கடவுள்கள் - என்பவை பார்ப்பனர்களின் மாபெரும் பித்தலாட்டமாகும் . இது சமஸ்கிருதம் வேத பாஷை , முக்கிய பாஷை , காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் போன்ற மொழிப் பித்தலாட்டம் போலவே இது ஒரு மாபெரும் கடவுள் பித்தலாட்டம் . உலகத்தைப் படைத்துக் காத்து அளிக்கும் சக்தி உள்ள , ஆதியும் அந்தமும் இல்லாத , உருவமற்ற - குணமற்ற கண்ணுக்கும் மனதுக்கும் எட்டாத , பிறப்பு இறப்பு இல்லாத , எங்கும் நிறைந்து யாவுமாய் இருக்கிற கடவுள் என்பதாக ஒன்று இருக்குமானால் இருந்து போகட்டும் . அதைப்பற்றி யாரும் இருக்கிறதா ... இல்லையா என்றுகூட தொல்லைப்பட வேண்டிய அவசியம் இல்லை ; அதை மறுக்க இக்கட்டுரை எழுந்ததும் அல்ல . ஏனெனில் , இந்தப்படி ஒரு கடவுள் இருப்பதை நம்பவேண்டுமென்று உலக மக்களில் பெரும்பாலோர் இடையில் , வெகு நாட்களாகச் சில மதங்களால் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்றாலும் , அந்த நம்பிக்கை வர வர 100 க்கு தொண்ணூற்று ஒன்பதே முக்கால் பேர்கள் ஒரு விளக்கமுமறியாத ஆசீர்வாதச் சடங்குபோல் கருதி , காரியத...