கடவுள்கள் பித்தலாட்டம்
விஷ்ணு அவதாரம்
விஷ்ணு அவதாரக் கடவுள்கள்
- என்பவை பார்ப்பனர்களின் மாபெரும் பித்தலாட்டமாகும்.
இது சமஸ்கிருதம் வேத பாஷை, முக்கிய பாஷை, காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் போன்ற மொழிப் பித்தலாட்டம் போலவே இது ஒரு மாபெரும் கடவுள் பித்தலாட்டம்.
உலகத்தைப் படைத்துக் காத்து அளிக்கும் சக்தி உள்ள, ஆதியும் அந்தமும் இல்லாத, உருவமற்ற - குணமற்ற கண்ணுக்கும் மனதுக்கும் எட்டாத, பிறப்பு இறப்பு இல்லாத, எங்கும் நிறைந்து யாவுமாய் இருக்கிற கடவுள் என்பதாக ஒன்று இருக்குமானால் இருந்து போகட்டும். அதைப்பற்றி யாரும் இருக்கிறதா... இல்லையா என்றுகூட தொல்லைப்பட வேண்டிய அவசியம் இல்லை; அதை மறுக்க இக்கட்டுரை எழுந்ததும் அல்ல.
ஏனெனில், இந்தப்படி ஒரு கடவுள் இருப்பதை நம்பவேண்டுமென்று உலக மக்களில் பெரும்பாலோர் இடையில், வெகு நாட்களாகச் சில மதங்களால் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்றாலும், அந்த நம்பிக்கை வர வர 100க்கு தொண்ணூற்று ஒன்பதே முக்கால் பேர்கள் ஒரு விளக்கமுமறியாத ஆசீர்வாதச் சடங்குபோல் கருதி, காரியத்தில் ஏமாறாமல் இருக்கவே முயற்சித்தும் நடந்தும் வருகிறார்கள். ஆதலால், அதற்கு ஆக நாம் எதுவும் சொல்ல இப்போது அவசரப்படவேண்டியதில்லை என்றே கருதுகிறோம்.
ஆனால், மதத்தின் பேரால் இந்துக்கள் என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் திராவிட (தமிழர்) சமுதாய மக்களாகிய நாம், கடவுள் சம்பந்தமாக என்ன கருத்துக் கொண்டு இருக்கிறோம்; அது சரியா, தப்பா என்பதைச் சிந்திக்க வேண்டியது அவசியம் என்றே கருதுகிறோம். அதற்கு ஏற்ற காலம் இது என்றும் கருதுகிறோம்.
இன்று நமக்குக் கடவுள்கள் சிவனும் அவன் மனைவி மக்களும் அவர்களைச் சேர்ந்த பரிவாரங்களும்.
விஷ்ணு, அவன் மனைவி, மக்கள், அவன் அவதாரங்கள் அவர்களது மனைவி மக்கள் அவைகளைச் சேர்ந்த பரிவாரங்களும்.
பிர்ம்மாவும் அவன் மனைவி மக்களும்,
மற்றும், இந்திரன், வருணன், அக்கினி, வாயு, சூரியன், சந்திரன் முதலிய வகைகளும், குறிப்பிட்ட ஒரு சில மிருகங்களும், ஒரு சில பறவை ஜெந்துகளும், ஒரு சில மரம், செடிகளும், ஒரு சில மலை, நதிகளுமாக இருக்கின்றன.
இவைகள் அவ்வளவையும் பற்றிய ஆராய்ச்சியை முகவுரையாக முதலில் குறிப்பிட்டுவிட்டு, பிறகு இந்துக்களுக்கு முக்கிய கடவுள்களாகக் கருதப்படும் விஷ்ணு, சிவன், அவர்களின் குடும்பம், பரிவாரம் ஆகியவைகளைப் பின்னால் சிந்திக்கலாம் என்று கருதி, ஆராய்ச்சிகளின் கருத்துக்களை வெளியிட்டு பின்னால் எழுதி வரலாம் என்று கருதுகிறோம்.
இந்த ஆராய்ச்சியானது இந்தக் கடவுள் தன்மைகள் ஆரியர்களுக்கு எப்படித் தோன்றிற்று, அவைகளின் தோற்றத்திற்கு ஆரியர்கள் மூல புருஷர்களா, அல்லது ஆரியர்கள் மற்ற நாட்டாரைப் பார்த்து நாட்டில் வழக்கில் இருந்ததைப் பார்த்து தாங்கள் காப்பி அடித்து அவைகளைக் கொண்டுவந்து நம்நாட்டில் புகுத்தினார்களா என்பவை முதலியவைகளை ஆதார ஆராய்ச்சிப்படி வெளியாகி இருக்கும் உண்மைகளைக் குறிப்பிடுகிறோம். அன்பர்கள் கூர்ந்து படித்துச் சிந்திக்க வேண்டுகிறோம்.
ஹிந்துக்கள் என்னும் ஆரிய மதத்தினர்களிடம் நல்ல கோட்பாடுகளைவிட ஒழுங்கீனமான மதக்கோட்பாடுகளும் பழக்க வழக்கங்களுமே ஏராளமாக இருக்கின்றன என்கிறார் ஆசிரியர் கால்வின்.
சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் இந்துக்கள் சாஸ்திரமான மனுவின் சட்டங்கள் அக்கிரமமானவை; நேர்மையற்றவை என்கிறார்.
ஹிந்துக்களின் தெய்வங்கள் என்பவையெல்லாம் கெட்ட குணங்கள், ஒழுங்கீன நடவடிக்கைகள் ஆகியவற்றையே பெரிதும் சித்தரித்துக் காட்ட மனித உருவில் கற்பனை செய்யப்பட்டவைகளாகும் என்று பல கவுரவமான பேரறிவாளர்கள் கருதுகின்றனர். உருவ வணக்கத்தின் கொள்கைகள் எல்லாம் பெரிதும் இதே போன்றவைதானென்பது ஆராய்ச்சியாளர் தீர்ப்பு.
இந்துக்களின் கடவுள்கள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறார்களோ அவை இந்துக்களுக்கு மாத்திரம் உரிமையான ஹிந்து மதக் கடவுள்கள் என்று கூற்றும் பொய்யென்பது, பல நாட்டு மத வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் விளங்கும்.
இந்துக் கடவுள்கள் என்பன, அயல்நாட்டு, அயல் மதத்தார்களின் கடவுள்களின் காப்பி (நகல்) என்றும் ஆதாரங்களின் மூலம் எண்ணவேண்டியிருக்கிறது.
உதாரணமாக, இந்துக்கள் லிங்க வடிவை அதாவது சிவன் என்று கூறுவதைக் கிரேக்கர்கள் பால்லி என்றும், எகிப்தியர் பிரியாபஸ் என்றும் இந்துக்கள் காளி என்று கூறுவதை கிரேக்கர்கள் தியேனா தவ்ரிகா என்றும் குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து யாருடைய கடவுள்கள் உண்மை, யாருக்கு அக்கடவுள்கள் தனியுரிமையானவை என்று நிர்ணயிக்கவியலாதிருக்கிறது. ஒரே வரலாற்றை ஹிந்துக்களும் கிரேக்கர்களும் வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றனர் என்றோ அல்லது ஒருவரிடமிருந்து மற்றொருவர் இக்கடவுளைச் சுவீகரித்துக் கொண்டனரென்றோ ஆகிறது.
உருவ வணக்கம்
ஹிந்துக்களின், கடவுள்களின் வரலாறுகள் பற்றிப் பற்பல கூறப்படுகின்றன. இவ்வரலாறுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாக இருக்கின்றன.
எகிப்தியர்களிடமிருந்துதான் இந்தியர்கள் தங்கள் மதத்தையும் கடவுள்களையும் பெற்றனர் என்று சிலரும், எகிப்தியர்கள்தான் இந்தியரிடமிருந்து தங்கள் மதத்தையும் கடவுள்களையும் பெற்றனரென்று சிலரும் வாதிக்கின்றனர். பாரசீகம்தான், மேற்படி இருநாட்டினர் மதம் கடவுள்களின் தாயகமென மற்றொரு சாரார் கருதுகின்றனர்.
வங்காள சால்டிய என்ற நாட்டில்தான் முதலில் சூரிய வணக்கம் காட்டுமிராண்டித் தன்மையிலிருந்த பழங்கால மக்களால் கைக்கொள்ளப்பட்டது என்றும், அங்கிருந்து பாரசீகத்திற்குப் பரவிற்று என்றும் ஒரு வரலாறு குறிப்பிடுகிறது. பின்னர் மற்றும் பல உருவக் கடவுள்கள் தோன்றின; மக்கள் அநாகரிகர்களாக இருந்த காலத்தில் மக்களின் பரபரப்பு நடவடிக்கைகளாலும், பூசாரிகளின் சுயநல குயுக்திகளாலும் பற்பல கடவுள்கள் உற்பத்திப் பெருக்கம் செய்யப்பட்டன. சால்டுயானா உருவ வணக்கம் பாரசீகத்தில்தான் அதிகமாகப் பரவிற்றாம். அங்கிருந்து பல திக்குகளிலும் பல நாடுகளுக்கும் பரவினவாம். எகிப்துக்கும் இந்தியாவுக்கும் இதே போலத்தான் உருவ வணக்கம் பரவியிருக்கிறதென்று கூறப்படுகிறது.
இந்த உருவ வணக்கத்தின் அடிப்படை உற்பத்தி இரகசியம் எவ்விதமாக இருந்தாலும் இப்போது இந்துக்கள் கையாளும் முறை உருவ வணக்கமேயாகும்.
இவர்களுடைய கடவுள்கள் எண்ணத் தொலையாதன; நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிய வண்ணமுள்ளன.
இந்துக்களுக்கு உருவ வணக்கப் புராணங்களே எல்லாமுமாக ஆகியுள்ளன. விஞ்ஞானம், கலை, இலக்கியம், சித்திரம், பழக்க வழக்கங்கள், உரையாடல் எல்லாவற்றிலும் இந்தப் புராணக் கோட்பாடுகள் கலந்துள்ளன என்று மேஜர் மூர் என்பவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்து மதத்துறை நூல்களில் சத்திய யுகம் - 1728000 ஆண்டுகள்
கிரேத யுகம் - 1296000 ஆண்டுகள்
துவாபர யுகம் - 864000 ஆண்டுகள்
கலியுகம் - 432000 ஆண்டுகள் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது அறிவுக்கெட்டாத கணக்காக உள்ளது. மற்றும் வேதயுகம் அல்லது மகாயுகம் என்கின்றனர். இது 306720000 ஆண்டுகள் கொண்டனவாம். மற்றும் இதுபோல கோடி கோடி என ஆண்டுகள் கணக்கிட்ட படியுள்ளன. இவைகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை. இந்துக்களின் தெய்வங்களின் பெயர்களும் பற்பல வட்டாரங்களில் பற்பலவாறாக உச்சரிக்கப்படுகின்றன; எண்ணிக்கைக் கடங்காத பெயர்களும் கூறப்படுகின்றன.
பிரம்மம்
இதை யாரும் அறிந்ததுமில்லை; கண்ணால் கண்டதுமில்லை. உலக சிருஷ்டிகர்த்தா இதுவென இந்துக்கள் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
பிராமணர்கள் இந்த கடவுள் பற்றிய ரகசியங்களை எல்லாம் தமக்குள்ளாகவே அடக்கி வைத்துக் கொண்டு, பொது மக்களுக்குத் தங்கள் விருப்பம்போல், பிரம்மத்துக்கு மனிதர்களின் பண்புகளையும் உருவத்தையும் கொடுத்து பலவகைக் கோட்பாடுகளைக் கூறிவந்துள்ளனர் என்று எர்க்ஸ்கின் என்பவர் கூறுகிறார்.
மற்றும், பிராமணர்கள் வெளியிடும் கொள்கைகளுக்கு ஏற்ப, இயற்கைக்கு ஒவ்வாத பல கதைகள் கட்டப்பட்டன. இவற்றிலிருந்து பூசாரி முறையும், குருட்டுக் கொள்கைகளும், குருட்டு நம்பிக்கைகளும் உற்பத்தியாகி உரம் பெறலாயின.
இந்துக்கள் முப்பத்து முக்கோடி தேவர்களையும் உருவங்களையும் தோற்றுவித்து வணங்கியதாக லார்ட் என்ற கிருஸ்தவ மதப் பிரசாரகர் வர்ணிக்கிறார்.
அதாவது, சாதாரண மனித உருவங்கள்; மனித உடல்களுக்கு மிருகங்களின் தலை, கை,
கால் அங்கங்களைக் கொடுத்த விநோத உருவங்கள்; சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், நதிகள், ஊற்றுகள், மரங்கள், கற்கள் ஆகிய பலவும் மதத்தின் பெயரால் வணங்கும் பொருள்களாக்கப்பட்டன. உருவங்களைக் காட்டி மக்கள் மனதை மயக்குவதுதான் எளிதாகவுள்ளதாகப் பிராமணர்களே ஒப்புக்கொள்கிறார்கள் என்கின்றனர் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள். எனவே, காணமுடியாததென்றும் அடைய முடியாததென்றும் வர்ணிக்கப்படும் அந்தக் கடவுள் இந்த ஏராளமான உருவக் கடவுள்களால் மறைக்கப்பட்டுப்போயின. ஒரு தனிக்கடவுள் பற்றிய எண்ணமே எழாதபடி செய்யப்பட்டுவிட்டது. இந்தக் குட்டித் தெய்வங்களுக்குத்தான் ஏராளமாக கோயில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அசல் கடவுள் (பிரம்மா) எனப்படுவதற்கு கோயிலே கிடையாது. தாங்கள் நெருங்க முடியாத கடவுளின் பெயரைச் சொல்லிச் சிலைகளை வணங்குகின்றனர் இந்த இந்துக்கள் என எதிர் மதத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர். இந்து மத நூல்களில் கூறப்பட்டவைகளின் உண்மை எதுவாயினும் நடைமுறைகள் முற்றும் தவறானவையேயாகும். அதாவது கடவுளைப் பற்றி நம்ப முடியாத கற்பனைக் கோட்பாடுகளை எல்லாம் தோற்றுவித்துக் கொண்டுள்ளனர்.
சிவனுக்கும் காளிக்கும் செய்யப்படும் பூசைகளும் விழாக்களும், ஆதி கடவுளுக்கெனக் கூறப்படுவது பொருத்தமில்லாத கூற்று. கடவுள் ஒன்றே என வேதங்கள் கூறுவதாக, வாயளவில் கூறி, எண்ணற்ற தெய்வங்களுக்கு விழாக் கொண்டாடுகின்றனர். இந்த உருவ வணக்கம் பற்றிய வரலாறுகள் அருவருக்கத் தக்கனவாக உள்ளன. சாந்தமான தெய்வங்கள் என்பனவற்றை விட அழிவு வேலைகளைச் செய்யும் கோர தெய்வங்களான சிவன், துர்க்கை, காளி ஆகியவற்றுக்குத்தான் அதிக மதிப்புத் தருகின்றனர்.
இந்த பல்வேறு உருவ வணக்கத்தைக் கைக் கொள்ளும்படி ஆதி கடவுளான சிவனே கூறுவதாக கூர்மபுராணம் என்பதில் தீட்டியுளர்.
சிருஷ்டி
இந்தப் பரப்பிரம்மம்தான் உலகை உற்பத்தி செய்தாரென்கின்றனர் இந்துக்கள். ஆனால், எவ்வகையில் உற்பத்தி செய்தாரென்பது பற்றி இந்து மதவாதிகளுக்குப் பல்வகையிலும் கருத்து வேற்றுமைகள் உள்ளன. பலரும் பலவித வரலாறுகளைக் கூறுகின்றனர்.
சிலர் கூற்று
பரப்பிரம்மம் முதலில் பவானி என்ற பெண் தெய்வத்தைப் பிறப்பித்தாளாம். (பவானி என்றால் இயற்கைச் சக்தி என்கின்றனர்) இந்த பவானிக்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன.
தாயான பவானியே பின்னர் மூன்று பெண்ணுருவங்களாக மாறி, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களை மணந்து கொண்டாள். (அதாவது தாயே தான் பெற்ற மக்களுக்கு மனைவியானாளாம்!).
மற்றொருவர் கூற்று
இயற்கைச் சக்திகள் ஒரு முட்டையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தன. அந்த முட்டை பதினான்கு சம பாகங்களாக வெடித்து மேலேழுலகம் கீழேழுலகம் ஆயின. பின்னர், கடவுள் மேருமலையில் தோன்றி பிரம்மாவுக்கு உற்பத்தி வேலையையும், விஷ்ணுவுக்கு பாதுகாக்கும் வேலையையும், சிவனுக்கு (பிரம்மா சிருஷ்டித்ததை) அழிக்கும் வேலையையும் தந்தார் என்பது.
மூன்றாவது கூற்று
முன்னிருந்த உலகம் அழிந்த பின் விஷ்ணு, அனந்தன் என்ற பாம்பின் மீது படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவருடைய தொப்புளிலிருந்து ஒரு தாமரைப்பூ தோன்றிற்று; அதில் பிரம்மா உற்பத்தியானார்; அவர் உலகை உண்டாக்கினார். இந்தவுலகை அழிக்கும் சிவனை பிரம்மா பெற்றெடுத்தார். அதன்பின் மனித இனத்தையும் உண்டாக்கினார். பிரம்மன் தலையிலிருந்து பிராமணரும், தோளிலிருந்து க்ஷத்திரியரும், தொடையிலிருந்து வைசியரும், பாதங்களிலிருந்து சூத்திரரும் தோன்றினர் (ஆணுடைய கை, கால், தலை முதலிய அங்கங்களிலிருந்து மனிதர்கள் பிறக்கும் இந்த விநோத வரலாறுகள் விளக்கத்துக்குரியனவாகும்).
பிரம்மன்
பிரம்மன் உலக சிருஷ்டி கர்த்தா என்கின்றனர். கிரேக்கர்களும், பெத்தினியர்களும் குறிப்பிடும் சாட்டர்ன் (சனி) என்ற தெய்வ வரலாறு இதே போன்றுள்ளது. இந்த பிரம்மா சிகப்பு அல்லது பொன்னிறத்துடன் நான்கு தலைகளுடையவராம். இவருக்கு அய்ந்து தலைகள் இருந்ததாகவும், சிவன் தன்னைவிட மேலானவனென இந்த பிரம்மன் ஒப்புக் கொள்ளாததால், சீற்றமடைந்த சிவன் ஒரு தலையைக் கிள்ளி எறிந்து விட்டதாகவும் சைவர்கள் கூறுகின்றனர். மற்றும், சிவனுக்கும் 5 தலையாகவும் பிரம்மாவுக்கும் 5 தலையாகவும் இருந்ததால் சிவன் மனைவி அடையாளம் தெரியாமல் அடிக்கடி ஏமாற ஏற்பட்டதால் பிரம்மாவின் ஒரு தலை சிவனால் கிள்ளப்பட்டது என்றும் கூறுகின்றனர்.
இந்த பிரம்மனுக்கு ஹம்சம் (வாத்து) வாகனம், சிலர் அன்னப்பறவை என்கின்றனர்.
வைஷ்ணவர்களும், சைவர்களும் இந்த பிரம்மன் கோவில்களை அழித்து விட்டனராம். இப்போது பிரம்மனை யாரும் மதிப்பதில்லை. இவருக்கும் ஏராளமான குட்டிப் பெயர்களுண்டு.
தட்சன்
தட்சன் பிரம்மன் அவதாரமாம்; சிவன் மனைவி சதி இவர் மகளாம். இந்த சதியின் மகனெனப்படும் வீரபத்திரன் தகப்பனாரான சிவனின் ஜடாமுடியிலிருந்து பிறந்தானாம். தன் தகப்பனான சிவனை அவமதித்ததாலும், தாய் தீயில் விழுந்து இறக்கச் செய்ததாலும் சீற்றமடைந்த வீரபத்திரன் தட்சனின் தலையை வெட்டி விட்டானாம். தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி பிரம்மா மீண்டும் தோற்றுவிக்கப்பட்டாராம்.
ஆனால், அவர் தட்சனாக இருக்கையில் வெட்டப்பட்ட தலை தீயில் விழுந்து பொசுங்கி விட்டதால், இந்த பிரம்மனுக்கு ஆண் ஆட்டின், (கடா)
தலை ஒட்டப்பட்டதாம். இப்போதும் அந்த பிரம்மா இந்த ஆண் ஆட்டின் தலையுடன் இருக்கின்றாராம்.
விஸ்வகர்மா
உலகை அமைத்த தச்சனார் விஸ்வகர்மா என்பவராம். கடவுளுக்குக் கையாம்; பிரம்மனின் மகனாம்.
இவர் மூன்று கண்களைக் கொண்ட வெள்ளை நிற உடலுடையவராம்.
நாரதர்
இவர் பிரம்மா - சரஸ்வதி மகன். இவர் கடவுள்களின் செய்தி பரப்பும் தூதனாம். வீணையைக் கண்டுபிடித்தவனாம்; இவனுக்கு மனைவியோ, காதல் கிழத்திகளோ இல்லை. ஒரு தடவை கிருஷ்ணனைச் சந்தித்தபோது, கிருஷ்ணனுக்குள்ள பதினாயிரம் கோபிகளில் ஒருவரைத் தனக்கு இரவலாகக் கொடுக்கும்படி அந்தக் கிருஷ்ணனையே கேட்டாராம். ஆனால் எந்தப் பெண்ணின் அறையில் நுழைந்தாலும் அங்குக் கிருஷ்ணன் உருவங்களைக் கண்டு திரும்பிவிட்டாராம்.
பிருகு
பிருகு, பிரம்மாவின் மகன்; பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் யார் உயர்ந்தவரெனத் தேவர்கள் இவரைக் கேட்டார்களாம். இவர் அம்மூவரைப் பரீட்சிக்கச் சென்றாராம். தகப்பனான பிரம்மாவுக்கு வழக்கமான வணக்கம் செலுத்தாது கண்டபடி திட்டிவிட்டு, சிவனிடம் சென்று அவரையும் அதிகமாகத் திட்டினாராம். அவர்கள் கோபித்துக் கொள்ளவே ஏதோ சாக்குபோக்குக்கூறி இருவரையும் சமாதானம் செய்துவிட்டு விஷ்ணுவிடம் சென்றாராம்.
அப்போது லட்சுமி பக்கத்தில் அமர்ந்திருந்த விஷ்ணு, தூங்கிக் கொண்டிருந்தாராம். இதைக் கண்ட பிருகு, விஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தாராம். விஷ்ணு கண் விழித்தார். பிரம்மா சிவனைப் போல் கோபிக்காது, உதைத்த கால் வலிக்கிறதா என்று கேட்டாராம். அதோடு நிற்காது. பிருகுவின் காலையும் தடவிக் கொடுத்தாராம்.
இந்த பிருகுவைப் பற்றிக் கூறப்படும் வரலாறுகள் தற்காலத்தவர் நம்பத் தகாதனவாக உள்ளன.
மலடியாகவிருந்த சுகுரு என்ற அரசனின் மனைவிக்கு 60 ஆயிரம் மக்கள் பிறக்கச் செய்தாராம் இவர். இவள் இன்னும் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டேயிருக்கிறாளா என்பது பற்றி இந்து புராணங்கள் குறிப்பிடவில்லை.
சப்த ரிஷிகள்
பிரம்மாவின் மகனான மனுவிற்குப் பிறந்தவர் ஏழு ரிஷிகள். இவர்கள் ஆறு பெண்களை மணந்தனர். ஏழு ஆண்கள் எவ்விதம் ஆறு பெண்களை மணந்து வாழ்க்கை நடத்தினரென்பதும் புராணங்களில் விளக்கப்படவில்லை.
சரசுவதி
பிரம்மாவின் மனைவி சரசுவதி, படிப்பின் தெய்வமாம். இவள், பிரம்மாவின் மகள் என்றும், விஷ்ணுவின் மனைவிகளில் ஒருத்தியென்றும் (உடன் பிறந்தவளே மனைவியானாள்) இந்துக்கள் கூறுகின்றனர்.
பிரம்மனின் மனைவி என்றே பெரும்பாலோர் சொல்லுகின்றனர். (தகப்பன் தன் சொந்த மகளையே பெண்டாட்டியாக்கிக் கொண்டாராம்). படிப்பு இந்த தெய்வத்தினிடமிருந்துதான் இந்துக்களுக்குக் கிடைக்கிறதாம். பொய்களை மன்னிக்க இவருக்குப் பூசை போடுவதாகக் கூறப்படுகிறது. இந்த பூசை, வெற்றி தருவதாகவிருந்தால் அடிக்கடி பூசைபோட வேண்டுமே; ஏனெனில் இந்துக்கள் அடிக்கடி பொய் கூறும் வழக்கமுடையவர்களென்று மேனாட்டுப் புலவர் சார்லஸ் கால்மன் கிண்டல் செய்கிறார். கிரேக்கர்களின் - ரோமர்களின் மினர்வா என்ற படிப்புத் தெய்வம் போன்றதே இந்த சரசுவதி.
கீழ்காணும் பட்டியலின்படி இரு வேறு மதஸ்தர்கள் - நாட்டினர் கடவுளும் ஒன்றியிருப்பதால், ஒரே கட்டுக்கதையையே, இந்த இரு மதத்தாரும் வெவ்வேறு பெயர்களில் காட்டுகின்றனரென்பதாகிறது. எனவே, புராணங்கள் இந்துக்களின் சொந்தம் என்றும், இந்து கடவுள்களின் பிறப்பு, நடப்பு, வரலாறுகள் என்றும் கூறப்படுவது முற்றிலும் ஆதாரமற்றதாகிறது.
கிரேக்க - ரோம கடவுள்களுக்கும் இந்துக் கடவுள்களுக்கும் ஒப்புமைப் பட்டியல் வருமாறு:-
சிவன், இந்திரன் - ஜுபிட்டர்
பிரம்மா - சாட்டர்னஸ்
யமன் - மைனாஸ்
வருணன் - நெப்ட்யூன்
சூரியன் - சோல்
சந்திரன் - லூனஸ்
வாயு -
ஈயோவஸ்
விசுவகர்மா - காஸ்டர் - போல்வாக்ஸ்
கணேசன் - ஜுனஸ்
விரஜாநதி அல்லது வைத்ராணி - ஸ்டிக்ஸ்நதி
குபேரன் - ப்ளூட்டர்ஸ்
கிருஷ்ணன் -
அப்பிலோ
நாரதன் - மெர்குரியன்
ராமன் - பச்சுஸ் (மதுவைக் கண்டுபிடித்தவர்)
கந்தன் - மார்ஸ்
துர்க்கை - ஜுனோ
சரசுவதி - மினர்வா
ரம்பை - வீனஸ்
உஷா -
அரோரா
ஸாகா - வெஸ்டா
பிரிநிவி - சைபெல்வி
ஸ்ரீ - சிரஸ்
ஆரியர்கள் வணங்கிவந்த சில்லறைத் தெய்வங்களின் இலட்சணத்தை ஆராய்வோம்.
வருணன்
கிரேக்கர், ஆகாயத்தை முரட்டுக் காளையாக உருவகப்படுத்தி, டையாஸ் என்று பெயரளித்து வணங்கி வந்தனர். கிரேக்க மொழியில் ஒரானாஸ் என்றால் ஆகாயம். ஒரானாஸ் என்பதையே ஆரியர்கள் வருணன் என்று குறிப்பிடுகின்றனர். வான மண்டலத்திலே தங்க மாளிகையிலே வசிக்கிறானாம் இந்த ஆரிய வருணன். அந்த மாளிகைக்கு ஆயிரம் வாசல்களும் அறைகளுமுள்ளனவாம். பளபளப்பான உடைகள் அணிபவனாம். ஒற்றர்களும் உடையவனாம். இவ்வளவு தூரம் இவனைச் சிறப்பித்து விட்டு அவனுடைய பிறப்பையும் இனத்தையும் குறை கூறியிருக்கின்றனர் ரிக் வேதத்திலேயே. அதாவது, அவன் ஒரு அசுரனாம் - மாய வித்தைகளின் மூலம் ஆட்சி புரிகிறானாம். இந்த மாயவித்தை என்பதற்கு இந்த சமஸ்கிருத வேதியர் இருபொருள் கூறுகின்றனர்.
ஆண்டவன் மாயலீலை என்பர். இதற்குப் பொருள் ஆண்டவனின் சிறந்த நடவடிக்கைகள் - திருவிளையாடல்கள் என்பதாம். அசுரர் மாய வித்தை என்றால் கேடுகள் விளைவிக்கும் நடவடிக்கைகள் என்று பொருள் கூறுகின்றனர். சொற்பொருளிலும் இனவேற்றுமை, சாதியுணர்ச்சி வாடை துளிர்விடுகிறது.
இந்த மாயசக்தியால் இந்த வருணன், சூரியனை வானத்திலே சுற்றிவரச் செய்கிறானாம். சூரியன், இந்த வருணனின் கண்ணாம்; மழைக் கடவுள் இந்த வருணனாம். ஆறுகள் கடல்களுக்கு அதிபதியாம். நாம் நமது தலைக்கு மேல் பார்க்கும் ஆகாயத்தைத்தான் வருணன் என்று பெயரளித்து கும்பிடுபோட்டு வந்துள்ளனர். கற்பனைக் கொள்கைகளிலே - அச்சத்தால் ஏற்பட்ட மூடக் கோட்பாடுகளிலே நம்பிக்கை கொண்ட, பிஞ்சுமதி ஆரிய மக்கள் என்பது மேற்படி விவரிப்பால் தெளிவாகிறது.
ஊர் சுற்றி விஷ்ணு
ரிக் வேதத்தில் விஷ்ணு பெயர் சில்லறைத் தெய்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஊர்கயா ஊர்க்ரமா என்ற அடைமொழிகள் கொடுத்து இந்த விஷ்ணுவை நாடோடி - ஊர் சுற்றித் தேவனாக்கியுள்ளது. அதாவது மண்ணுலகம், வானுலகம் ஆகாயம் ஆகிய மூவுலகில் திரிபவனாம். வாமனாவதாரக் கதை இக்கோட்பாட்டை அடிப்படையாய்க் கொண்டு புனையப்பட்டதாகிறது. சூரியனின் நடவடிக்கைகளுக்கு உருவமளித்து விஷ்ணுவெனப் பெயரிட்டழைத்தனர் என்று யூகக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன் உஷா
ஆகாசக் கடவுளான வருணனுக்கும் அவன் மனைவி அதிதிக்கும் பிறந்தவனாம் சூரியன். பக்தர்களுக்கு விடுதலை தருவது இந்த அதிதி தேவனின் பணியாம். மற்றும் அருணோதயத்திற்கும் உஷா என்று பெயரிட்டுத் தேவதையாக்கி விட்டனர். உஷாதேவியின் காதலன் சூரியனாம். இந்த உறவிலும் ஒரு விசித்திரக் கோட்பாடு - உலகம் சிரிக்கும் பகுத்தறிவுக் கொவ்வாத ஒரு கற்பனைக் கருத்து! அதாவது, காலையில் இந்த உஷாதேவி சூரியனுடைய காதலியாம். நடுப்பகலாகும்போது இவள் சூரியனின் தாயாகி விடுகிறாளாம்! இரவானதும் இவள் இரவின் சகோதரியாம்; மற்றும் இருக்கும் அக்னி தேவனுக்கும் கூட தொடர்பு காட்டுகிறது, இந்த ரிக்வேதம். இந்த வரலாறு ரிக்வேதத்தில் உஷா சுலோகங்கள் என்பதில் அடங்கியுள்ளது. மதுக்குடியையும் தெய்வத்தன்மை - தெய்வப் பணியாக்கியுள்ளனர், மதுவை சோமதேவனாக்கி.
அஸ்வினி - தேவர்கள்
அஸ்வினி - தேவர்கள் இணைபிரியா இரட்டையர்; பெரும் குடியர்; தாங்கள் ஊர் சுற்றும்போது மதுக் குடங்களைத் தங்கள் தேரிலேயே சுமந்து செல்வரெனவும் சப்ளை செய்வாரெனவும் ரிக் வேதம் விவரிக்கிறது. இவர்களுடைய வண்டியை எருமையும், கழுதையும் இழுத்துச் செல்லுமாம். இவர்களுடைய தங்கை உஷாவாம். இவர்களுக்கும் சூரியனுக்கும் தொடர்புண்டாம். ஆனால், இந்தத் தொடர்பிலும் உலகம் நம்பமுடியாத விசித்திரக் கூற்று நுழைக்கப்பட்டுள்ளது. அதாவது, சூரியன் பெண்ணுருக்கொண்டு இந்த அஸ்வினி தேவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறானாம். சூரியன் மகள் தான் இவர்களுக்கு மனைவி என்கிறது மற்றோரிடத்தில் இந்த மறையவர் மறை.
முதல் கூற்றை, அதாவது சூரியனை ஆணாக்கி இரட்டை சகோதரருக்கு மனைவியாக்கிய வரலாற்றைப் பொய்யாக்குகின்றனர்; அல்லது இந்த விசித்திரக் கூற்றை அறிவுலகம் நம்பாதே என்று பின்புத்தி இடித்துக்காட்டி அறிவு கொளுத்தியது போலும்! ஆணைப் பெண்ணுருவாக்கி, இரு ஆண்களுக்கு ஒரு மனைவியாக்கிய கூற்றை மறைத்து, சூரியனுடைய மகள் சூரியா என்பவளே அஸ்வினி தேவர்களின் துணைவி என்று பின் திருத்த விளக்கம் தந்துளர் பிறிதோரிடத்தில். இந்த இரு கூற்றுக்களும் ரிக் வேதத்தில் இடம் பெற்றுத்தானுள்ளன.
சூரியாவின் இரு கணவர் அஸ்வினிகள். இவரை அவ்விருவரும் தாங்கள் செல்லுமிடமெல்லாம் தங்கள் கழுதை அல்லது எருமை பூட்டிய வண்டியில் ஏற்றிச் செல்கின்றனராம். இவர்கள் தேவலோக மருத்துவர்கள் என்று வர்ணிக்கப்படுகிறது.
மற்றும், வருணனைத் தங்களுக்கு மழையும் தண்ணீரும் அளிக்கும் தெய்வமாகக் கருதி வணங்கிவிட்டு, அதே சமயத்தில் அவனைத் தங்கள் இன விரோதியான அசுர குலத்தினன் என்கின்றனர் இந்த ஆரிய வேத மேதாவிகள். இது முன்னுக்குப்பின் முரணான பித்தர் போக்குக் கொள்கையுமாகவுள்ளது.
இதேபோலத்தான் சூரியனையும் தெய்வமாக்கிக் கொண்டுவிட்டனர். அருணோதயப் பொன்னிற வெளிச்சத்திற்கு சாவித்திரி என்று பெயரிட்டுப் பெண் தெய்வமாக்கிக் கும்பிட்டு வந்தனர். காயத்திரி ஜபம் என்பதும் காலையில் மனப்பாடம் செய்யப்படும் சமஸ்கிருத சுலோகங்களே - இந்த அருணாதேவியிடம் வரம் கேட்பதே - புகழ்ந்து பாடுவதே காயத்திரி, சாவித்திரி என்ற பெண் தெய்வ வணக்க நூலாயினும், இதில் பெண்களை இழிவுபடுத்தும் சுலோகங்கள் பலவுள்ளன. மற்றபடி இதில் எந்த தெய்வீகமும் நுழைக்கப்பட்டிருப்பதாகக் காணோம். ரிக் வேதத்தில் விஷ்ணு பெயர் சில்லறைத் தெய்வப் பட்டியலில் தான் காணப்படுகிறது.
அமுதமுண்டு, பிணி, மூப்பு சாக்காடற்றவர்கள் தேவர்கள் என்று பிராமண வேத இதிகாசங்களில் தீட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அஸ்வினி இரட்டையர்களை - ஒரு பெண்ணைப் பொது மனைவியாக்கிக் கொண்டிருக்கும் சகோதரர்களை, வேத வைத்தியர்களென்கின்றனர். பிணி, மூப்பு, சாக்காடற்றவர்களுக்கு வைத்தியர் ஏனோ? இதிலும் மற்றொரு பித்தலாட்டக் கூற்று! இந்த அஸ்வினிகளின் வைத்திய சிறப்புப்பற்றி வண்டி வண்டியாகக் கதை கட்டியுள்ளனர் ஆரிய வேதப் புலவர்கள். ஆனால், இவர்களுடைய வைத்திய முறை விவரம் இதுவரை யாருக்குமே தெரியாதாம்; அவர்களும் தெரியவைக்கவில்லையாம். வெறுங் காவடி, பால் பொங்கும் பழனியாண்டவர் அருள் கதையைப் போலத்தானுள்ளது இதுவும். கன்னியிருட்டு (நாலாம் ஜாமத்தில் - விடியல் வெளிச்சத்துக்கு முன்னுள்ள வெளிச்சமும் இருட்டும் கலந்த நிலைமை) என்று நாம் எதைக் கூறுகிறோமோ அதைத்தான் ஆரியர்கள் அஸ்வினி தேவரென்கின்றனர். மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது இவர்களைப் பற்றி. அதாவது, சூரிய குமாரியுடன் இவர்கள் நடத்துவது விடியாத காதல் நாடகமாம். அதாவது, அவள் இன்னும் இவர்களைத் திருமணம் செய்து கொள்ளாது பேரம் பேசும் காதலியாகவே இருக்கிறாளாம். எனவே, இந்த இரட்டையர்கள் விடிவெளிச்ச நேரத்தில் கண்விழித்து அவளைப் பின்பற்றித் திரிகிறார்களாம். தங்களை மணந்து கொள்ளும்படி அப்பெண்ணிடம் இவர்கள் மன்றாடுவதாக ஒருசாரார் கூற்று.
சந்திரனுக்காக சூரியாவிடம் மணத் தூதராகச் சென்று பேரம் பேசிய வண்ணம் இருக்கின்றனரென்பது மற்றொரு சாரார் கூற்று. இந்த விடியாத காதலும் விடியாத காதல் தூதும் எப்போது விடியுமோ? அந்த ஆரிய மாயக் கடவுள்களுக்கே வெளிச்சம்.
சந்திரனுக்காக சூரியாவிடம் மணத் தூதராகச் சென்று பேரம் பேசிய வண்ணம் இருக்கின்றனரென்பது மற்றொரு சாரார் கூற்று. இந்த விடியாத காதலும் விடியாத காதல் தூதும் எப்போது விடியுமோ? அந்த ஆரிய மாயக் கடவுள்களுக்கே வெளிச்சம்.
கிரேக்க புராணத்திலும் இம்மாதிரி ஒரு கட்டுக்கதையுள்ளது. அதாவது, லெட்டிஸ் தேவனின் இரு புத்திரர்கள் சூரியனுடைய மகளை அல்லது சூரியனைச் சமுத்திரத்திலிருந்து மீட்கப் பாடுபடுகிறார்களாம்.
மற்றும், அஸ்வினிகள் என்பது காலையையும் மாலையையும் குறிப்பிடும் மேற்குறியீடுயென்றும், காலை மாலை நட்சத்திரங்களை அதாவது விடிவெள்ளி, அந்தி வெள்ளி நட்சத்திரங்களைக் குறிப்பிடுவதென்றும் அறிஞர்கள் கருத்து. காஸ்டர் - போல்லக்ஸ் என்ற இரு நட்சத்திரங்களைத்தான் அஸ்வினி என்கின்றனர் என்கிறார் வெப்பர் என்ற மேனாட்டு அறிஞர். காலஞ்சென்ற லோகமான்ய திலகரும், வேதங்களில் மிருக சீரிய நட்சத்திரமும் துருவ மண்டலமும் என்ற ஆராய்ச்சி நூலிலும் இதே கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்திரன்
ரிக்வேத ஆரியர்களின் முக்கிய தேவன் இந்திரன். ரிக்வேதத்தில் கால் பகுதிக்கு மேல் இந்திரனைப் பற்றிய புகழ்ப்பாடல்களும் அருள் வேட்டல் பாடல்களுமேயாகும். இந்த இந்திரனுடைய திருவிளையாடல்களைப் பற்றித் தான் ஏராளமான கட்டுக்கதைகளை இந்த ஆரிய புராணீகர்கள் உற்பத்திப் பெருக்கம் செய்துள்ளனர். மற்ற தெய்வங்களைவிட இந்த இந்திரனுக்குத்தான் அதிக மனிதத் தன்மை, மனிதப் பண்புகள், மனித நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தந்து வர்ணித்துள்ளனர். அதாவது, காதல் திருவிளையாடல்களில் மனிதரைவிட மிஞ்சும் போக்கு இந்த இந்திரன் கொண்டுள்ளான்.
இந்த இந்திரன் தனி ஆரிய சிருஷ்டி அல்ல. அவெஸ்தா என்ற பார்சிய வேத நூலில் இந்திரனை ஓர் ராட்சதனாகக் கொள்ளப்பட்டுள்ளது. இவனும் பெரும் மதுக்குடியனே - சோமபானக்காரன்.
இந்த சோமபான போதையால் இவன், மற்ற தேவர்களைவிட அதிக சண்டைக்காரன் என்று பெயர் வாங்கியுள்ளான்; குடிகாரன் போக்கு இதுதானே!
இந்த இந்திரனுக்கு சோமப்பா - சோமபானக்குடியனென்ற சிறப்பு இடுகுறிப் பெயரிட்டழைத்தனர் ஆரிய வேதியர்கள். இந்த இந்திரனுடைய தகப்பன் யார் என்பது பற்றி ஆரியப் புலவர்களுக்குள்ளாக சச்சரவாகவுள்ளது. வர்ணன் என்ற மூல தேவன்தான் இவன் என்று சில வேத சுலோகங்களில் உள்ளன. விஷ்தரியின் மகன் என்று மற்றும் சில வேத சுலோகங்களில் உள்ளது. அக்கினியும் இந்திரனும் இரட்டைப் பிறவியாம். விசித்திரக் கூற்றாகவுள்ளது இது.
ஏனெனில், இந்திரன் மழை
- தண்ணீர்க் கடவுள்; அக்கினி நெருப்புக் கடவுள் என்பது ஆரியக்கூற்று. தண்ணீரும் நெருப்பும் எப்படி இணைந்திருக்குமோ தெரியவில்லை! இந்த இந்திரன் மழைக்கு அதிபதியாம். இவன் மழை பெய்யச் செய்வது பற்றிப் பகுத்தறிவுக்கு இயலாத ஓர் புராணக்கதை கூறப்படுகிறது.
விருத்ரன் என்ற மலைப் பாம்பு ஒன்று மேகங்களைச் சிறைப்படுத்தி வைத்துக்கொள்கிறதாம். இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் மலைப் பாம்பை அடக்கி, சிறையைச் சிதைத்து மேகங்களை விடுதலை செய்து மழை பெய்விக்க வைக்கிறானாம். இங்கேதான் ஆரியப் புலவர்களின் மவ்டீக அறிவு சுடர்விடுகிறது! மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட கட்டுக்கதை இதுவாகிறது. மேகங்கள் மோதி மின்னல் மின்னுகிறது; இடியும் ஏற்படுகிறது. இந்த மோதுதலால் சிதைந்து தாழ்ந்த மேகங்கள் கருக்கட்டி மழையாகப் பொழிகின்றன. இது அறிவுலகம் கண்கூடாகக்காணும் மெய்மை. மேகங்கள் மலையில் மோதி - தேங்கி - கனத்து மழையாகப் பொழிகின்றன. மலைச் சிகரங்களில் மேகங்கள் தங்கியிருப்பதை, விருத்ராசூரன் என்ற பாம்பின் கோட்டையில் மேகங்கள் சிறைப்படுத்தப்படுவதாகக் கற்பனைப்படுத்திக் கூறியுள்ளனர்.
இயற்கையின் மெய் இரகசியத்தை அறிந்திராத - அறிவு அடிமட்ட நிலவரத்திலிருந்த - மழைக்காக ஹோமப் புகையைத் தூதுவிட்டு ஆகாச வருணனிடம் அண்ணாந்து முறையிட்டு, அருள் வேண்டி ஏங்கித்தவிக்கும் யாகாவதியர்கள், மேலும் இடியைத்தான் வஜ்ராயுதமாக கற்பனை செய்துள்ளனர் இவ்வேதத்தார்.
எனவே, மழை பொழிவதற்கான இயற்கை ஓட்டச் சக்தியைத்தான் ஆரியர்கள், இந்திரனாக உருவகப்படுத்தி சுலோகங்கள் தொகுத்துவைத்துக் கொண்டனரென்பது தெளிவாகும். மற்றும், இந்திரன் என்ற பெயரினன் ஆரியப் பாதுகாப்புத் தளபதிகளில் முதல்வனாம். தஸ்யூக்கள் என ஆரியரால் அழைக்கப்படும் பழங்குடி மக்களை ஒழித்துக்கட்டும் போரில், இவன் அடிக்கடி ஈடுபட்டு வந்தான் என்பது தெளிவு. அதாவது, ஆரிய வர்ணத்தைப் பாதுகாப்பவன் கருப்புத் தோல்களை (தஸ்யூக்களை) அடக்குபவன் என வேத சுலோகம் கூறுகிறது.
எனவே, ஆரியக்காப்பு விபீஷண கும்பலில் இவனும் ஒருவன் என்பது தெளிவு. ஆரியக் காவலனான ராமனை அவதாரமாக்கியது போல ஆரியக் காவலனான இந்த அசுரனையும் மழைத் தேவனாக்கிக் கொண்டனர் என்பதும் தெளிவு. இந்த சோம போதைத் தேவனின் சண்டைக் குணம், ஆரியரல்லாதாரை ஒழித்துக்கட்டுவதுடன் நின்றுவிடவில்லை; தன்னைப் பெற்று வளர்த்த சொந்தத் தகப்பனான யஷ்திரி என்பவனையே கொன்று தீர்த்துவிட்டானாம். ஆரிய மொழியில் கூறவேண்டுமானால், இவன் கொடிய நகரத்திற்குரிய குற்றமான பித்ருஹத்தி தந்தையைக் கொலை செய்தவனாகிறான்.
மற்றும், இவன் உஷையின் தேரையும் தாக்கி சிதைத்தானாம்; சூரியன் குதிரைகளையும் மறியல் செய்தானாம். சோமபான போதையின் விபரீத விளையாட்டுகளில் இவ்விரண்டும் முக்கிய சாம்பிள் போலும். இதன் உண்மைக் கருத்து என்ன? மேகப் படலங்களாலும் மழைத் தாரைகளாலும் சூரியன் மறைபட்டுப்போவதும், வெயிலும் வெளிச்சமும் நிலத்தூடு பாயாது போவதுமேயாகும். பெருந்திண்டிக்காரன், பெருங்குடியன் என்கிற ஆரியரின் சிறப்பு வர்ணனை மழையின் வேகத்தையும் வெள்ளத்தின் அரிப்புச் செயலையும்தான். இவ்விதம் கற்பனை செய்து கூறுகின்றது வேதியமதி. முன் கதையைக் கண்டு அறிவுலகம் எள்ளி நகைத்தது போலும். விருத்ராசூரன்தான் மலையில் மேகங்களைக் கட்டிப்போட்டு மழை பெய்யாது செய்கிறவன் என்று பிற்காலத்தில் ஆரியர் வேறு கதை கூறலாயினர். இதன் உண்மை என்ன? உயர்ந்த மலையில் பனிபடர்ந்து தண்ணீர் உறைந்து போகிறதல்லவா? இதையே விருத்ராசூரனின் செய்கை என்று வர்ணித்துள்ளனர். இடியும் மின்னலும் ஏற்பட்டால் இந்தப் பனிப்பாறைகள் நெக்குவிட்டும். சூடேறிக் கரைந்தும் தண்ணீராக மாறி நிலத்தூடு பாய்கிறது.
இந்திரன் மழைத் தேவன் என்பது எவ்விதம் பித்தலாட்டமாகிறது என்று பார்ப்போம்.
இந்திரன் - விருத்ராசூரன் கதையில் இடி, மாரி பற்றியோ மழையைப் பற்றியோ இல்லை. இந்திரனால் சிறை மீட்கப்பட்ட தண்ணீர், பந்தயக் குதிரைபோல் ஓடலாயிற்றென வேத நூல் வர்ணிக்கிறது மழைத் தாரைகளாவது பந்தயக் குதிரைபோல் நிலத்தூடு ஓடுவதாவது! குதிரை ஆகாயத்திலிருந்தா தலைகுப்புற ஓடிவரும்? வஜ்ராயுதம் என்பது உலோகத்தில் (தனிப்பொருள்) செய்யப்பட்டது என்கிறது வேதம். இது இடியைக் குறிப்பிடுகிறதா இல்லையா என்றும் தெளிவாகவில்லை. உலோகம் நிலத்தில் கிடப்பது; ஆகாயத்திலிருந்து பொழிவதில்லையே. இந்திரன் இடி மழைத் தேவனானால், பாஞ்சன்யா என்று இவர்கள் கூறுகிறார்களே மற்றொரு மழைக்கடவுள், அதன் மதிப்பு மண்ணாகிறது.
எனவே, இது கலப்படமற்ற பகுத்தறிவுக்கேலாத கட்டுக்கதையேயாகிறது.
இதைப்போன்ற கதை மேனாட்டிலுமுள்ளது. அதாவது பனி நாடான வடகோடி வட்டாரங்களில் ரஷ்ய சதுப்பு நிலப்பணி மண்டலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கதை.
அந்தத் தென் ரஷ்ய வட்டாரத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தபோது ஆரியர்கள் இந்த இந்திரன், விருத்ராசூரன் கதையையும் சுமந்து வந்துள்ளனர். பெரும்பாலும் நடுப்பகலில் மழை நின்று விடுகிறதல்லவா? இதைப் பற்றியும் கற்பனைக் கருத்து, ஆரியர் பிள்ளை மதியில் தோன்றியுள்ளது.
அதாவது,இந்திரனுக்குச் சண்டை அலுப்புத்தீர ஓய்வு நேரமாம் நடுப்பகல். இயற்கை சக்தியின் நுணுக்கமறியாத கூற்று இது. நடுப்பகலில் சூரியன் அதிக சூடாக இருப்பதால் மழை மேகங்கள் குளிர்ச்சித் தன்மையை இழந்து சிதைந்து, தண்ணீராக முடியாது போகின்றன. சூரியன் சாய்ந்து சூடும் குறைந்தால், மழை மேகங்கள் மீண்டும் குளிர்ந்து, மழை பெய்கிறது. இது,
வான நூலறிஞர்களும் மற்றோரும் ஒப்புக்கொள்ளவேண்டிய இயற்கை மெய்ம்மை.
ருத்திரன்
வெறியன் - பேய் பிடித்தவன் என்கிறார்களே. அவனைப் போன்ற அலங்கோலத்தோற்றமுடையவன். இந்த ருத்திரன் சடைமுடியும் கருநிறமும் கொண்டவனாம்; மற்றும் பயங்கர காட்டு மிருகம் போன்ற மூர்க்கனாம். ஆகாயக் கரடியென்றும், முரட்டுக் காளையென்றும் இவனை வர்ணித்துள்ளனர். இவனுக்குத் திடீர் திடீர் எனக் கோபம் கொதிக்குமாம். அற்பக் காரணத்தாலும் சீற்றம் சீறுமாம். இவன் வீசும் இடி ஆயுதம் ஆரியர்களையும் அவர்களுடைய பசுக்களையும் கொல்லுமாம். எனவே, அவ்விதம் கொல்ல வேண்டாமென, வேதியர் இத்தேவனிடம் கருணைப் பிச்சை கேட்டுத் துதிபாடுவாராம். இந்த நாசவேலை ருத்திரனை நோய் தீர்க்கும் மருத்துவன் என்றும் கூறி, முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களையும் வேத சுலோகங்களில் காட்டியுள்ளனர். எளிதில் சீற்றமடையும் இவனிடம் குளிர்ச்சியிருக்கிறதாம். ஆகவே, இந்த ருத்திரன் என்பது கார்மேகமேயாகிறது. குளிர்ச்சி பொருந்தியவன் என்றும், குளிர்ச்சியளிப்பவனென்றும், சுத்தப்படுத்துபவன் என்றும், நோய் தீர்க்கும் மருத்துவனென்றும் (சூட்டினால்தான் பெரும் பாலான நோய்கள் ஏற்படுகிறதென வைத்திய நூலில் கூறப்படுகிறது) வர்ணித்திருப்பதெல்லாம் கருமேகத்தின் குளிர்ந்த தன்மையையும் குளிர்ச்சிதரும் மலையையும் சுத்தம் செய்யும் சூட்டைத் தணிக்கும் மழை நீரையுமே குறிப்பிடுவதாகிறது.
ஒரு சூலில் 180 பிள்ளைகள்
இத்துடன் விடவில்லை ஆரியக் கற்பனை; வெண்மேகங்களைப் பசுவாக்கியுள்ளனர். இந்தக் கருமேகமான ருத்திரனுக்கும் வெண்மேகமான பிரிசினி என்ற பசுவுக்கும் 180 மக்கள் பிறந்தனராம். இந்த எண்ணிக்கையையும் வேதத்தின் மற்றொரு பகுதி பொய்யாக்குகிறது.
மாருதர் என்ற பெயரைக் கொண்ட இந்த மக்கள் 21 பேரெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும், வாயுவையும் இந்த மாருத தேவர்களின் தகப்பனெனவும் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ஒரு பெண்ணான பிரிசினி (பசு)க்கு ருத்திரன், வாயு என்ற இரு கணவராம். இப்பிள்ளைகள் எல்லோரும் ஒரே வயதினராம். ஒரே பிரசவத்தில் 180 பிள்ளைகள் பிறந்ததை எந்த அறிவுலகம் நம்பும்? இத்துடன் போகவில்லை. கருமேகமும் வெண்மேகமும், வெண்மேகமும் வாயு (காற்று) வும் சேர்ந்து பிள்ளைகள் பெற்ற கதை!
இந்த மாருதப்பிள்ளைகள் தாயும் தகப்பனுமின்றித் தானாகப் பிறந்தனவென்றும் மற்றொரு வேதமொழி கூறுகிறது! இந்த விசித்திரக் குழந்தைகளின் பிறப்பின் ரகசியம் வேதவித்துக்களுக்கும் திட்டமாகத் தெரியாது போலும்! எனவே, இப்படி அப்படி எப்படியோ பிறந்தனர் என்ற முறையில் கதை கட்டி விட்டனர். அறிவாளர்கள் விளக்கம் கேட்டுத் திகைக்க வைக்கும்போதெல்லாம் புதுப் புதுக் கதைகளைக் கட்டித் தலை தப்ப முற்பட்டிருக்கின்றனர் ஆரியர் என்பது இவற்றால் புலனாகிறது. மழைக்குமுன் ஏற்படும் சூறைக் காற்றையும், மழையோடு சேர்ந்துவரும் புயலையும் (மண்மாரி சுழல் காற்று முதலிய) தான் இவர்கள் மாருத தேவர்களாக்கியுள்ளனர். சண்டமாருதம் என்பது புயல்காற்று, மாந்தமாருதம் என்பது மென்காற்று என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்த மாருத தேவர்களே பாலும் தேனும் நெய்யும் மழையாகப் பொழிந்ததாக வர்ணித்துள்ளனர். அதாவது, தேவன் பொழிந்த மழையை இவ்வாறாக உருவகப்படுத்தி மனத்தளவில் மகிழ்ந்துள்ளனர்.
அக்கினி
அக்கினி - தீ, இதுதான் வேதியரின் உயிர்த்தெய்வம், வேதியர் என்றால் நெருப்பு மூட்டுபவர்; தீயைத் துணையாகக் கொண்டவர் எனவும் விரிவுரை காணலாம். வேது கொடுத்தல் என்றால் உடல் சூடுண்டாகச் சுடுநீர் அல்லது சுடு தவிட்டு ஒத்தடம் கொடுத்தல்; எனவே, வேது என்றால் சூடு, ஆகவே, வேதி என்றால் சூடுடைய தீ,
நெருப்பு, அக்கினியாகிறது; இந்த அக்கினியை வாழ்க்கைத் துணையாகவும்; வாழ்க்கைச் சாதனமாகவும் கொண்டவர் வேதியராகின்றனர். மழைக் கடவுளான இந்திரனிடம் தங்கள் கோரிக்கைகள் என்ற செய்தியை மந்திரங்கள் என்பன மூலம் மண்ணுலகிலிருந்து வானுலகுக்கு அனுப்பும் புகையைக் கிளப்புவதும் இந்த அக்கினி தேவனே, (ஹோமயாகம் மூலம்) எனவே, இந்த அக்கினி இன்றேல் ஆரியர் வாழ முடியாது போகுமே!
எனவேதான், அக்கினி அவர்களுடைய உயிர்த்தேவன்; உயிர் வாழச் செய்யும் தேவனாகிறான் போலும்! இந்த அக்கினி தேவனின் உருவ வர்ணனையைப் பாருங்கள்; முதுகு வெண்ணையாம் (வெண்மைநிறச் சாம்பல் பூத்துப்போன வெண்சாம்பல்) தலைமயிர் நெருப்புச் சுவாலை போன்றதாம்; நெருப்புச் சுவாலைகளையே இது குறிக்கிறது. உண்பதோ, மனிதரைப்போல் வாயாலல்ல; நாக்கினாலாம். நெருப்பு சுவாலைகள் பொருள்களில் பற்றி எரிப்பதன் உருவகம் இது. இவனுக்கு உணவு பாலும், வெண்ணையும், வெண்னையுருக்கிய நெய்யுமாம். ஹோமத்தீயில் யாகத்தீயில் இந்த வேதியர் ஊற்றுவது இவைதானே. அத்துடன் இந்த அக்கினி தேவனும் மற்ற தேவர்களைப் போன்றே சோமபான மதுக்குடியன்; இந்த சோமபானம் அக்கினி தேவன் நாக்கில் ஊற்றப்படுமோ அல்லது பக்தர்களின் வாயில் ஊற்றப்படுமோ என்பதற்கு வேத நூலில் ஆதாரம் காணோம். இந்த தேவனுக்கு நாடோறும் மூன்று வேளை (காலை, நண்பகல், மாலை) உணவு தரப்படுகின்றதாம்.
புரோகிதர்கள் சுவர்க்கலோகத் தபால் பெட்டிகளா என்று கேள்வி போடுகிறார்களே இக்காலப் பகுத்தறிவாளர்கள்; (கல்யாணம் - கருமாதிச் சடங்குகளில் புரோகிதருக்கு அரிசி, பருப்பு, காய்கறி, உணவுப் பண்டங்கள் அளிப்பது கண்டு சந்தேகத்தால்) இக்கேள்விக்கு ரிக் வேதம் பதிலளிக்கிறது. இந்த அக்கினி தேவனை மற்ற தேவர்களின் வாயாக்கியுள்ளனர். யாக, ஹோம,
வேத வித்துக்கள் இந்த அக்கினி தேவர்களின் நாக்கில் (சுடரில்) உணவுப் பண்டங்களைப் போட்டால் தேவர்களின் வயிற்றுக்குள் போய்ச் சேர்ந்து, அந்தத் தேவர்கள், பிராமணார்த்தத் திருப்தி ஏப்பம் விடச் செய்து விடுமென்பது வேத சித்தாந்தம். நெருப்பிலே கொட்டிய பண்டம் எரிந்து சாம்பலாகிவிடுமே! சாம்பல் தான் தேவர்களின் ஆகாரமோ! இந்த சாம்பலும் ஆகாயத்தில் பறந்து செல்வதைக் காணோம். ஹோமக்குழியில் தானே கிடக்கிறது சவ நிலையில். பின்னர் அதனை வேதியக் கைகளே வாரிக் கொண்டுபோய் குளத்திலும் கிணற்றிலும் ஆற்றிலும் கொட்டுகின்றனவே! அல்லது சாம்பலைச் சலித்தெடுத்து நெற்றியிலும் உடலிலும் வேடப்பூச்சாகப் பூசிக்கொள்கிறார்களே!
புரோகிதர்களின் நெற்றியும் வயிறும் மற்ற அங்கங்களும் சிவித்திர உணவுப் போக்குவரத்துச் சாதனமா? சாம்பலானது தேவர்களின் உணவாவதற்கும், அவைகள் வேதியர் நெற்றி உடல் பூச்சு மூலம் தேவர்களிடம் சென்று சேர்வதற்கும் ஆதாரங்கள் காணோமே வேதங்களில்.
புகை - தூணாம்
புகையின் உண்மை சக்தியை இந்த விஞ்ஞான உலகம் இன்னும் கண்டுபிடிக்கவில்லையே! இதோ வேதம் கூறுகிறது, இந்தப் புகைப்படலம் ஆகாயத்தைத் தாங்கும் தூணாம். அக்கினி இந்தப் புகைத்தூணை சிருஷ்டித்து, ஆகாயத்துக்கு முட்டுக்கொடுத்து, அந்த ஆகாயம் இந்த ஆரியர் வாழும் உலகத்தின் மீது விழுந்து நசுங்காது தடுக்கின்றனவாம். கல்லையும் மண்ணையும் சுண்ணாம்பையும் கான்கிரீட்டையும் இரும்புக் கம்பங்களையும் தேடித் திரிகிறார்களே இக்காலக் கட்டிட நிபுணர்கள். இந்த வேத ரகசியத்தை அறிந்து கொண்டிருந்தால் அதாவது புகையைத் தூணாக்கும் முறையை ஆரிய வேதியரிடம் கற்றுக்கொண்டிருந்தால், ஆகாயமெட்டும் மாடிகளையும் எளிதில் கட்டி விடலாமே! விமானங்களையும் ராக்கெட்டுகளையும் செய்து கொண்டு கால விரயமாக்கும் மேனாட்டு விஞ்ஞானிகளாவது இந்தப் புகைப் போக்குவரத்து சாதனத்தின் ரகசியத்தைக் கற்றுக் கொள்ளலாகாதா?
மக்களை முட்டாளாக்குவது
பிறரை முட்டாளாக்குவது மிக மிக எளிது என்றாரே ஒரு ஆங்கில அறிஞர். அதற்கு இந்த வேத ரகசிய (பித்தலாட்ட ஏமாற்று வித்தை) வரலாறே மிக மிகப் பொருத்தமான உதாரணமாகிறது!
இந்த வேத அக்கினி தேவனின் குணபாவங்களும் நடைமுறை ஆற்றல்களும் எப்படி விசித்திரமாக உள்ளனவோ அதே போலத்தான் இவனுடைய பிறப்புப் பற்றிய வரலாறும் விசித்திரமாகவுள்ளது. வேத நூல்படி, இவன் ஆதி தேவனின் மகனென்கிறது ஒரு வேத வரலாறு, மற்றோரிடத்திலோ, வானத்திற்கும் பூமிக்கும் பிறந்தவன் இந்த அக்கினி தேவனெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிசயப் பிறப்பு
அடடா! இந்திரன் தந்தையைக் கண்டு பிடிக்கும் வரலாறுகளையும் மீறிவிட்டது, இந்த அக்கினி தேவன் பிறந்த முறைபற்றிய ரகசியம். மனிதர்களுக்குக் குழந்தையும், மிருகங்களுக்குக் குட்டியும், பறவைகளுக்குக் குஞ்சுகளும் பிறக்கும் முறையில் இந்த அக்கினி தேவன் பிறக்கவில்லையாம், இந்த அக்கினி தேவனைப் பிறப்பித்த தாயும் தகப்பனும் யார் எவை தெரியுமா? இந்த ஆரிய வேதியர்கள் கையிலிருக்கும் இரண்டு குச்சிகள்; இக்கால நெருப்புக்குச்சிகளல்ல; முற்கால காட்டு மனிதர்கள் தீக்கடையும் குச்சிகள், அதுவும் அக்கினி அன்றாடம் பிறப்பிக்கப்படுகிறானாம். இந்த அக்கினிக் குழந்தை, அதாவது தினம் வேதியர்கள் இந்தத் தாயும் தந்தையுமான குச்சிகளைச் சேர்த்து உறைத்ததால் அக்கினி தேவன் பிறந்து விடுகிறானாம்! நொடிப்போதில் பெரியவனாகிப் பலன்பட்டு விடுகிறான். இவ்விதம் தீக்கடையும் குச்சிகளைக் கொண்டு மூட்டப்பட்ட நெருப்பு சில மணி நேரத்தில் அதிகம் போனால் இரவு நேரத்திலாயினும் அணைந்து போகிறதே; இது அக்கினி தேவனின் அன்றாடச் சாவு போலும்! அன்றாடம் பிறந்து, அன்றாடம் செத்து, அன்றாடம் உயிர் மீட்சி பெறும் விசித்திரன் போலும் இந்த அக்கினி தேவன்! இவனை வருணதேவனோ பூமி தேவியோ பெறவில்லை என்பதும் இந்த பூலோக மக்களே சுள்ளி விறகுகளைக் கொண்ட அன்றாடம் பெற்றெடுத்து, பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் சாகவிட்டு விடுகின்றனரென்பதும், இந்தத் தீக்கடையும் குச்சிகளின் செய்கை பற்றிய வேத சுலோகங்களால் வெட்ட வெளிச்சமாகிறது.
யாகத் தீயே
அக்கினி தேவன் என்று ஆரிய வேதியர் குறிப்பிடுவது யாகத் தீயை மனித உருவில் வர்ணித்துள்ளனர் என்பதே தெளிவுரையாகும். தூமகேது என்றால் கெடுதி விளைவிக்கும் கெடுதியை முன்னறிவிக்கும் கெட்ட நக்ஷத்திரம் என்பது இப்போது சோதிடரென்போர் கூறுவது. இந்த அக்கினிக்கும் தூமகேது என்று ஆரியர் பெயரிட்டுள்ளனர். எனவே இந்த அக்கினி தேவனும் நாசகார தேவனேயாகிறான்.
இந்த அக்கினிக்கு வலிமையின் மகன் என்றும் பெயராம். இதற்குக் காரணம், இந்த தீக்கடையும் வேலை அந்த ஆரியர் காலத்தில் மிகவும் சிரமமாக இருந்ததேயாகும். மற்றும் இந்த தேவனைப் பிறப்பிக்க உதவியவர் பத்துப் பெண்கள் என்று வேத நூல் வர்ணிக்கிறது. இந்தப் பத்துப் பெண்கள் வேறு யாருமல்ல; தீக்கடைவோரின் இரு கைகளிலுள்ள பத்து விரல்களேயாகும்.
புரட்டுக் கதை
உண்மை இதுவாக, இந்த அக்கினி வான நீர் மண்டலத்தில் பிறந்தவனெனவும் மற்றொரு கட்டுக்கதையையும் இந்த ஆரிய நூல் உற்பத்திப் பெருக்கம் செய்துள்ளது. இத்துடன் நிற்கவில்லை, இவனுடைய பிறப்புக்கதை. மேலேழுலகம் எனப்படுவதில் எல்லாவற்றிற்கும் மேலாகவுள்ள முதல் வானுலகில் பிறந்த இவனை இப்போதுள்ள ஏழாவது கடைசி வானுலகுக்கு, மாதரீஸ்வன் என்ற தேவன் கொண்டுவந்து சேர்த்துவிட்டானாம். இந்த முக்கதைகளும், கருத்திலும் நடப்பிலும் முரணாகவும் நம்பத் தகாததாகவுமுள்ளன.
முப்படை இந்த அக்கினி எல்லாவற்றிலும் முப்பட்டைப் பண்பிளைன் என்றும் ஆரியப் புரோகிதர்கள் பெருமையாகக் கூறிக் கொள்கின்றனர். அதாவது, தலையும் மூன்றாம்; உடலும் மூன்றாம் - (தேஜஸ்) ஒளியும் மூன்றாம் - பிறப்பு முறையும் மூன்றாம்; மூன்று நாமமிடுதல்; முப்பட்டைச் சாம்பல் பூசுதல்; தண்ணீரை இறைத்தல் என்ற முறைகளைப் புரோகிதர்கள் இந்த அக்கினி புராண அடிப்படையில் தான் கைக்கொண்டனர் என்பதாகிறது. மூன்று பேர் சேர்வது மூதேவி தகாதது மூவர் சேர்தல் எதுவும் ஆகாது என்றும் சில மக்கள் கருதி வருவது அறிந்ததே. மூன்று என்னும் எண்ணையே சிலர் வெறுக்கின்றனர். ஆரியக் கடவுள்களும் அக்கடவுள்களின் வரலாறுகளும் முப்படையாக இருப்பதானதும், இந்த முப்பட்டைத் தேவர்களின் பெயரால் வேதியர்கள் விளைவிக்கும் தொல்லைகளை அனுபவித்தும், கேடுகள் விளைந்ததை அனுபவத் துறையில் கண்டும்தான் சில பொது மக்கள் இந்த மூன்று என்ற எண்ணையே வெறுக்கின்றனர் என்றும் சிலர் யூகிக்கின்றனர்.
லோகப் புரோகிதனாம்
இந்த அக்கினியையும் இரு பிறப்பாளனாக்கியுள்ளனர். இரு பிறப்புக்குலத்தார். (பூணூலுக்குமுன் ஒரு பிறப்பு, பூணூலிட்டுக் கொண்டதும் இரண்டாம் பிறப்பு).
யாகங்களின் மூலதேவன் அக்கினியாகையால் இவனுக்கும் புரோகிதன், பிராமணன் என்று பெயரிட்டு உலகப் புரோகிதத் தொழிலின் வேதப் பிரதிநிதியாக்கியுள்ளனர்.
இந்த யாகமும், ஹோமமும் சமஸ்கிருத ஆரியரின் தனியுரிமையோ, சுகசிருஷ்டியோ அல்ல.
இத்தாலியரும் கிரேக்கரும் கூட நெருப்பில் அர்க்கியம் (பொருள்களை சொரிந்து வணங்குதல்) செய்யும் முறையைக் கைக்கொண்டிருக்கின்றனர்.
பிரகஸ்பதி
பிரகஸ்பதி தேவகுருவாம்; பிராமணஸ்பதி என்றும் இவனுக்குப் பெயர். அக்கினியைப் போன்றே இந்த பிரகஸ்பதியும் வீட்டுப் புரோகிதனும் பிராமணப் புரோகிதனும் ஆவான் என்றும், பிரார்த்தனைகளை உற்பத்தி செய்பவனென்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பிரகஸ்பதியை பிராமணப் புரோகிதன் என்கின்றனர்; அடுத்தபடி பிரம்மாவை உண்டு பண்ணியவன் இவனே என்கின்றனர்.
பிற்கால வேதாந்தத் தத்துவத்தில் அடிபடுவது இந்த பிரம்மாவேதானாம்.
சோமதேவன்
(மதுக்கடவுள்) அடுத்தபடி ஆரியரின் முக்கிய தேவன் மதுக்கடவுள். இதிலிருந்து ஆரியன் மதுவைத் தெய்வ
மதுவுண்பவன்தானே மதுவைச் சிறப்புப் பொருளாகக் கொண்டாடுவது வழக்கம்.
Comments
Post a Comment